வாழ்க்கை என்பது பயணம். உலகத்தில் அதில் எல்லோரும் பயணிக்கிறார்கள். நம் கூட குடும்பத்தினர்கள் அப்பா, அம்மா, பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள், விசுவாசிகள் என்று ஒவ்வொருவரும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதில் சிலர் தங்கள் பயணத்தை நடுவிலே முடித்துவிடுகிறார்கள். மரணம் சம்பிவிக்கும்போது இந்த உலகத்தின் பயணம் முடிந்து விடுகிறது.
 
எலியாவின் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட ஒரு பயணம் கர்த்தர் கட்டளையிட்டிருந்தார். ஆனால், எலியாவிற்கோ வேறு விதமாய் தன் வாழ்க்கையையே முடித்துக் கொள்ளத் தீர்மானித்திருந்தார்.
கர்த்தருக்காய் வைராக்கியமாய் நின்ற தீர்க்கதரிசி. இஸ்ரவேல் ராஜாவாகிய ஆகாபும், அவள் மனைவி யேசபேலும் தேவனுக்கு விரோதமாக பாகாலின் தீர்க்கதரிசிகள் 450 பேரைக் கூடிவரச் செய்து யார் உண்மையான தேவனென்று சோதிக்க பலியை எந்த தேவன் ஏற்றுக் கொள்கிறாரே அவரே தேவனென்று சவால் விட்ட எலியா. (1 இராஜா. 18:23) பாகாலின் 450 தீர்க்கதரிசிகள் கத்திக் கூப்பாடுப் போட்டும், பாகால் அவர்கள் பலியை ஏற்கவில்லை. ஆனால், ஒரே தீர்க்கதரிசியாய் நின்று உடைக்கப்பட்டிருந்த பலிபீடத்தை செப்பனிட்டு கர்த்தருக்காய் பலியை செலுத்திய போது, கர்த்தர் அக்கினியால் அதை ஏற்றுக் கொண்டார். பின்பு அனைத்து பாகாலின் 450 தீர்க்கதரிசிகளையும் கொன்று குவித்தார் (1 இராஜா. 18:40). இவ்வளவு நேரம் மிகத் தைரியமாய் நின்ற தீர்க்கதரிசி, யேசபேல் ராணி பாகாலின் தீர்க்கதரிசிகளைக் கொன்றதற்காய் எலியாவை கொல்ல முயற்சிக்கிறாள் (1 இராஜா. 19:1&2). அவளுக்குப் பயந்து வனாந்திரத்தில் ஓடி, தான் சாக வேண்டும் என்று புலம்பியபடி தூங்கிய எலியாவிற்கு, கர்த்தருடைய தூதனானவர் இரண்டு முறை தட்டி எழுப்பி, நல்ல உணவு கொடுத்து, கூறிய வார்த்தை
“நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்”
அதற்கு பின்பு கர்த்தர் அவனோடு இடைபட்டு, தன்னை வெளிப்படுத்தினார், (1 இராஜா. 19:11&13). கர்த்தரோடு பேசும்போது தன்னைக் குறித்து மிகவும் தாழ்த்திப் பேசினார். தான் ஒருவன் மாத்திரம் இருப்பதாகக் கூறிய கர்த்தர் எலிசாவிடம், பாகால் தெய்வத்திற்கு விரோதமான 7000 பேர்களைத் துணையாகக் கொடுக்கிறார். இரண்டு இராஜாக்களை அபிஷேகம் பண்ணுகிற கிங் மேக்கராக அவரை மாற்றுகிறார். எலியாவிற்குப் பின்பாக வல்லமையான எலிசாவை அவரது ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக நியமிக்கும் ஒரு பெரிய பொறுப்பான பயணத்தை கர்த்தர் காட்டுகிறார்.
 

செத்துவிட துடித்த எலியாவை ஒரு பெரிய பயணத்தை செய்ய ஆயத்தப்படுத்தினார். இதனை வாசிக்கும் அன்பு தம்பி, தங்கையே! சகோதரனே சகோதரியே! நீங்களும் பயணிக்க வேண்டிய பிரயாணம் வெகு தூரம். உங்களைக் கொண்டு வல்லமையாக தேவன் செயல்பட ப்ளு பிரண்ட் ஆண்டவரிடம் உண்டு. இன்று நோக்கமே இல்லாமல் வாழ்க்கைப் பயணத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் வாலிபர்களே! எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது, (ஏசாயா 60:1). கர்த்தரோடு கூட இடைபடுங்கள். அவரது வல்லமையில் பலப்படுங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் வீச்சை உங்களுக்குக் காண்பிப்பார். உங்கள் அவிசுவாசம் வார்த்தைகளை தூக்கிப் போடுங்கள். நீங்கள் ஆண்டவருக்காக பயணக்க வேண்டிய பிரயாணம் வெகு தூரம்.    

கிறிஸ்துவின் இராஜ்யத்தைக் கட்டும் சிற்பிகளில் ஒருவன்,
சுவிசேஷகர் யோவான் காந்தி இரா
சுவிசேஷகர்
நங்கூர ஊழியங்கள்

R Yovan Gandhi, Evangelist