குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது. – நீதிமொழிகள் 31:10

சிந்தனைக்கு
குணசாலியான பெண்மணியைக் குறித்து மிக அழகாக 10லிருந்து 31 வரை நீதிமொழிகள் 31ம் அதிகாரத்தில் பார்க்கலாம். குணசாலியான பெண்மணிகளால் சந்ததியே ஆசீர்வதிக்கப்படும் (வசனம் 28-29). வீண் அழகிற்கும் வசீகரத்திற்கும் முக்கியத்துவம் தராமல் கர்த்தருக்குப் பயப்படுகிற பெண்மணிகளாய் (வசனம் 30) வாழ ஆலோசனை தரப்பட்டுள்ளது. கர்த்தருடைய பிள்ளைகளே அப்படிப்பட்ட பெண்களை வேறெங்கும் தேட வேண்டாம். நம் இல்லத்திலேயே இருப்பார்கள். வாழ்த்துங்கள். இன்னாள் இனிய நாளாய் அமைய வாழ்த்துக்கள்.
– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799

