
ஆதார் அட்டை அறிமுகம்
இந்திய தனிப்பட்ட அடையாள அமைப்பின் மூலமாக இந்திய அரசாங்கம் ஆதார் அடையாள அட்டையை 2009 முதல் வழங்கி வருகிறது. ஒவ்வொரு குடிமகனும் அதைக் கட்டாயம் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மத்திய மாநில அரசு நலத் திட்டங்கள் முழுமையாக மக்களிடம் சென்றடையவும், நிதி மோசடிகளைத் தவிர்ப்பதற்காகவும், இந்த அட்டை வழங்கப்படுகிறது. இதில் 12 இலக்க தனிப்பட்ட எண் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது. சாதாரண மனிதனின் அதிகாரம் என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.
இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் ஒரு எண் என்ற அளவில் இது அமைகிறது. இந்த அட்டையில் மொபைல் பார் கோட்டின் மூலமாக ஒருவரின் அனைத்து அடையாளங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். 10 கை விரல்களின் அடையாளங்களும், கண் விழி அடையாளம், ரேஷன் அட்டை விபரங்கள், வங்கி கணக்கு விபரங்கள், என்று மேலும் பல கணக்குகள் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதனால் ஒருவரின் நிதி வரவு செலவீனங்கள், அரசாங்கத்திடம் பெறும் நலத்திட்டங்கள், ரேஷன் கடையில் வாங்கிய விபரங்கள், லோன் பெற்ற விபரங்கள் என்று எல்லாவற்றையும் அரசாங்கத்தினால் கண்காணிக்க முடியும்.

இந்த அடையாள எண் அட்டை மூலம் அநேக நண்மைகள் உண்டு. சமீபத்தில் இண்டேன் நிறுவனம் ஆதார் அட்டையை பதிவு செய்ய வலியுறுத்தியது. காரணம், சமையல் சிலிண்டர் வாயுவுக்கு அரசு அளிக்கும் மானிய தொகையை அது உபயோகிப்பாளரின் வங்கிக் கணக்கில் செலுத்த திட்டமிட்டுள்ளதைக் குறித்து அறிவித்தது. மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட வெப்சைட்டைப் பார்க்கவும். http://indane.co.in/aadhaar.php. இவ்வாறாக அரசு மக்களுக்கு தரும் மானியத் தொகை நேரிடையாக மக்களுக்குச் சென்றடையும்.
அந்திக் கிறிஸ்து ஆட்சியில்
வரப்போகும் அந்திக் கிறிஸ்து ஆட்சியில் நடக்கப் போகும் சம்பவத்தை இங்கு பார்ப்போம்.
வெளி.13:16,17 ல் “அது சிறியோர் பெரியோர் ஐசுவரியவான்கள் தரித்திரர் சுயாதீனர் அடிமைகள் இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும் அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது” அந்திக் கிறிஸ்துவின் ஆட்சியில் உலகம் ஒரு குடையின் கீழ் வரும். அப்பொழுது பொருளாதார கண்காணிப்பை முத்திரை மூலமாக செய்வான்.
ஆதார் அட்டையிலும் அதைப் போன்ற அமைப்பு உள்ளது. சமையல் எரிவாயு வாங்குவதற்கு இப்போது ஆதார் அட்டை மிக அவசியம் தேவைப்படுகிறது. பொருளாதார கண்காணிப்பையும் அரசாங்கம் செய்யலாம்.

மிருகம் (அந்திக் கிறிஸ்து) ஆட்சி உலகத்தில் ஏற்படுவதற்கு இவ்வாறாக உலகத்திலுள்ள ஒவ்வொரு நாடும் தயாராகிக் கொண்டிருக்கிறது. சீக்கிரத்தில் அவன் வெளிப்படுவான். சாதாரண மனிதனின் அதிகாரமா? அல்லது அந்திக் கிறிஸ்துவின் அதிகாரமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
666 முத்திரை வருவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்பு மணவாட்டியாகிய திருச்சபை ஆயத்தமாக வேண்டும். கரத்தர் சீக்கிரம் வரப் போகிறார். நீங்கள் ஆயத்தமா? மாரநாதா! கர்த்தாவே சீக்கிரம் வாரும்.

கிறிஸ்துவின் இராஜ்யத்தைக் கட்டும்
சிற்பிகளில் ஓருவன்
(சுவிசேஷகர் யோவான் காந்தி இரா)

