சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள். – நீதிமொழிகள் 27:6

சிந்தனைக்கு
நண்பர்கள் ஒரு வேளை அடித்தால்தான் நாம் உணர்ந்து கொள்ளுவோம் என்பதற்காக அடித்தவைகள். நம் நலத்திற்கு அடித்த அடிகளாக இருக்கலாம். ஆனால், எதிரிகள் இனிக்க இனிக்க பேசுவதும் முத்தமுடுவதும் நம்மை கவிழ்ப்பதற்காகத்தான். ஆதலால், நண்பர்களின் கடிந்துக் கொள்ளுதலை நாம் புரிந்து கொண்டு நட்பு பாராட்ட வேண்டும். எதரிகளின் வார்த்தைகளுக்கு மயங்கிட வேண்டாம்.
– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799

