ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.. –   நீதிமொழிகள் 16:7

நீதிமொழிகள் இன்று

சிந்தனைக்கு

கர்த்தருக்கும் மனித உறவுகளுக்கும் என்ன சம்பந்தம். சம்பந்தம் உண்டு. இன்றைய தியானத்தில் கர்த்தருக்கு பிரியமாயிருந்தால் சத்துருக்களும் சமாதானமாய் போவார்கள் என்றிருக்கிறது. ஆதலால்தான் இயேசுகிறிஸ்து தேவனிடத்தில் அன்பு கூருவதையும், பிறனிடத்தில் அன்பு கூருவதையும் தேவனுடைய கற்பனைகளாக (மத்தேயு 22:37-39) கூறுகிறார். ஆதலால், கர்த்தருக்கு பிரியமாயிருப்பது மிகவும் முக்கியம். காரணம், கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், நமக்கு சத்துருக்களை இருக்கமாட்டார்கள். காரணம் நம்மோடு சமாதானமாய் போவார்கள் எப்படி சத்துருக்களாய் இருப்பார்கள்? கர்த்தருக்குப் பிரியமான வழிகளில் நாம் நடக்க ஆண்டவர் உதவுவாராக.

– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799