மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம். – நீதிமொழிகள் 15:13

சிந்தனைக்கு
இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் (லூக்கா 6:45). மனம் மகிழ்ச்சியாய் இருந்தால் முகமலர்ச்சியைத் தரும். ஆதலால், நமது மனதிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆதலால்தான் பவுலடியார் உள்ளான மனுஷன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது என்று வெளித்தோற்றத்தைவிட உள்ளான மனதிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். (ஒரு வேளை சூழ்நிலைகள் மிகவும் மோசமாக இருந்தாலும்) நீங்கள் ஒவ்வொரு நாளும் மனதை மகிழ்ச்சியாய் வைத்திருக்க வேண்டும். கலக்கமடைந்தாலும் மனமுறிவடைவதில்லை (2 கொரி 4:8) என்றும் பவுலடிகளார் நம்மை உற்சாகப்படுத்துகிறார். சோர்ந்து போயிருக்கும் சகோதரனே சகோதரியே கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியைக் கேளுங்கள். உங்கள் மனோ துக்கத்தை தூக்கிப் போடுங்கள். உங்கள் முகமும் ஆவியும் பொலிவடைதைக் காணலாம்.
– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799

