• 9840872799
  • anchorministries.in@gmail.com
  • Chennai, TN, INDIA
Blog
14-நீதிமொழிகள் இன்று

14-நீதிமொழிகள் இன்று

கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். – நீதிமொழிகள் 14:26

சிந்தனைக்கு

இன்று பலர் கர்த்தரின் மேல் கொஞ்ச நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தன் தேவைகளுக்கு கொஞ்சம் ஆண்டவரிடமும் சொல்லி வைப்போமே என்று பத்தோடு ஒன்றான நம்பிக்கையாக கொண்டிருக்கிறார்கள். இன்றைய தியானத்தின்படி கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்கு திடநம்பிக்கை உண்டு. அவன் வாழ்வில் எந்தவிதமான தாழ்வுகள் வரும்போதும் கர்த்தரையே தன் நம்பிக்கையாக கொண்டிருக்கிறார்கள். அதனால் அவன் மாத்திரமல்ல; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். நாம் முழுவதுமாக கர்த்தருக்குப் பயந்து அவரையே நம் நம்பிக்கையாக கொண்டிருப்போமா?

– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799