நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்: பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காக சேர்த்துவைக்கப்படும். – நீதிமொழிகள் 13:22

நீதிமொழிகள் இன்று

சிந்தனைக்கு

நீதிமொழிகளில் முழுவதும் இரண்டு விதமான மக்களைக் குறித்துப் பேசுகிறது. நல்லவன், பாவி; நீதிமான், துன்மார்க்கன்; விவேகி, மூடன்; ஞானவான், துரோகி; சோம்பேறி, ஜாக்கிரதையுள்ளவன்; சத்திய உதடு, பொய் உதடு; சாத்திய வாசகன், பொய்சாட்சிக்காரன்; ஞானமுள்ளவன், மதியீனன்; குணசாலியான ஸ்தீரி, இலட்சை உண்டு பண்ணுகிறவள் என்ற எல்லா இடத்திலும் கூறப்பட்டதைக் காணலாம். நல்லவர்களுக்கு தொடர்ச்சியாக பிள்ளைகளுக்கும் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் சுதந்திரத்தைக் கொடுக்கும். ஆனால் கெட்டவர்களின் ஆஸ்தி தொடர்வதில்லை. அது நீதிமானிடம் சென்று சேர்ந்து விடும். ஆண்டவர் நாம் நல்லவராக இருக்க உதவுவாராக.

– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799