• 9840872799
  • anchorministries.in@gmail.com
  • Chennai, TN, INDIA
Blog
12-நீதிமொழிகள் இன்று

12-நீதிமொழிகள் இன்று

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. – நீதிமொழிகள் 12:28

நீதிமொழிகள் இன்று

சிந்தனைக்கு

நீதியின் வழிகளில் வாழ்வு உள்ளதால் நாம் அனுதினமும் அதில் நடக்க வேண்டும். அநீதியின் வழிகள் மரணத்திற்கு வழிநடத்தும். மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகின்ற வழியுண்டு. அதன் வழிகள் மரண வழிகள் (நீதி. 14:12). ஆதலால், நமக்கு நல்லது என்று தோன்றுகின்ற வழியில் நடக்காமல், கர்த்தரின் பார்வையில் நீதியின் வழிகளில் நடக்க நம்மை ஒப்புக் கொடுப்போம். அதில் நடப்பதனால் மரணத்திற்கல்ல. நித்திய ஜீவனுக்கு வழி நடத்தும். நித்திய வாழ்வின் நிச்சயத்தோடு நீதியின் வழிகளில் நடக்க நம்மை இன்றைய நாளில் நடக்க தீர்மானிப்போம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799