கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். – நீதிமொழிகள் 10:22

சிந்தனைக்கு
பண ஆசையுடைவர்களாய் தங்களைத் தாங்களே உருவக் குத்திக் கொண்டு (1 தீமோ. 6:10), செல்வம் சேர்ப்பவர்கள் உண்டு. ஆனால், இன்றைய தியானத்தில் தேவன் ஆசீர்வாதமாக ஐசுவரியத்தைத் தருகிறார். அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தில் வேதனைகள் இருக்காது. ஈசாக்கு பஞ்ச காலத்தில் (ஆதி.12:1&12) விதை விதைத்து, அந்த வருடத்தில் 100 மடங்கு பலன் அவருக்குக் கிடைத்தது. அது கர்த்தரால் வந்த ஆசீர்வாதம். அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை நமக்கும் தந்தருள்வாராக.
– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799

