
சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். – நீதிமொழிகள் 5:21
சிந்தனைக்கு
பொதுவாக சோம்பேறித்தனமுள்ளவர்களுக்கு கூறப்பட்ட வசனம் அன்று. எல்லோருமே எறும்பினிடத்தில் கற்றுக் கொள்ள வேண்டும். அதின் வழிகள் என்ன என்ன என்று ஆராயும்போது, நமக்கு அநேக பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது. நம்மைப் போன்று ஆரசியலமைப்பு அதினிடத்தில் இல்லை. நீ பெரியவன் நான் பெரியவன் என்ற எண்ணம் இல்லை (வசனம் 7). கோடைக்காலத்தில் சேர்த்து வைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தனக்குண்டான நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறது; அதிகப்படியாக உழைக்கிறது. மழைச் சேமித்து வைக்கிறது. (வசனம் 8). நல்ல சந்தர்ப்பத்தில் நன்றாக சுறுசுறுப்பாக வேலை செய்தும், வேலை செய்ய முடியாதக் காலத்திற்காக சேர்த்து வைக்கும் நல்ல பழக்கத்தைக் கற்றுத் தருகிறது எறும்புக்கள். நல்ல பாடம் கற்று வாழ்க்கையில் முன்னேறுவோம். வாழ்த்துகளுடன்…
– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799

