உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே. –   நீதிமொழிகள் 23:22

நீதிமொழிகள் இன்று

சிந்தனைக்கு

பொதுவாக பெற்ற தாய் என்று குறிப்பிடுவதுண்டு. ஆனால் வேதாகமம் பெற்ற தகப்பன் என்று குறிப்பிட்டுள்ளது. ஆம், தாயின் பொறுப்பு பிள்ளைகளை பெறுவதில் வளர்ப்பதில் இருக்கிறது. அதில் தந்தைக்கும் மிக அதிகமான பொறுப்புண்டு. இன்றைய தலைமுறையினர் பொதுவாக தலைமுறை இடைவெளி என்றும், உங்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியாது; உங்களுக்கெல்லாம் வயசாச்சு என்று உதாசீனப்படுத்துவது உண்டு. ஆனால், உன் தாய் வயது சென்றவளாகும் போது அவளை அசட்டைப் பண்ணாதே என்று ஆலோசனை தருகிறது. அதில் அநேக ஞான அர்த்தங்கள் இருக்கும். பெற்ற தந்தையும் வயதான தாயையும் மதிக்கிறவர்களாய் இருக்க ஆண்டவர் நம்மை மாற்ற அர்ப்பணிப்போம்.

– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799