ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான். – நீதிமொழிகள் 9:9

நீதிமொழிகள் இன்று

சிந்தனைக்கு

ஸ்டீபன் ஆர் கவே (Stephen R Covey) என்ற தலைமைத்துவ எழுத்தாளர், தனது ”அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள் (7 Habits of Effective People)” என்ற புத்தகத்தில் ஏழாவது பழக்கமாக முன்பு கூறிய 6 பழக்கங்களை பட்டைத் தீட்டுங்கள் என்று கூறியிருப்பார். ஆம், பட்டை தீட்டுவது ஞானமுள்ளவனுக்கு உண்டான குணம். ஞானமுள்ளவன் போதகத்தைக் கேட்டு ஞானத்தில் தேறுவான். ஆதலால், நாம் முன்னேற வேண்டுமானால் ஞானத்தில் தேறுகிற ஞானமுள்ளவர்களைப் போலவும், உபதேசத்தை ஏற்றுக் கொண்டு நீதிமானின் அறிவு பெற வாஞ்சிப்போம்.

– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799