தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.– நீதிமொழிகள் 8:13

நீதிமொழிகள் இன்று

சிந்தனைக்கு

இன்றைய சிந்தனையில் இரண்டு விதமான காரியத்தைக் குறித்துப் பார்க்கிறோம். ஒன்று கர்த்தருக்குப் பயப்படும் பயம். இரண்டாவது கர்த்தர் வெறுக்கிற காரியங்கள். இன்னும் சொல்லப் போனால் இரண்டு விதமான மக்களைக் குறித்துக் குறிப்பிட்டுள்ளது. ஒன்று தீமையை வெறுக்கிறவர்கள். இன்னொன்று பெருமை, அகந்தை, புரட்டு வாயுடையவர்கள், தீய வழி தன் வழியாக கொண்டவர்கள். இவர்களை கர்த்தர் வெறுக்கிறார். நாம் தாழ்மையோடு தீமைக்குப் பயப்படுகிறவர்களாக கர்த்தருடைய பிள்ளைகளாக இருப்போம். ஆண்டவர் அப்படிப்பட்டவர்களாக இருக்க இன்றைய தினம் உதவுவாராக.

– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799